இருந்து பாடிய இரங்கற்ப்பா

Posted: June 10, 2014 in Uncategorized
Tags:

கவிதை எழுதிய மகனை, தந்தை 

கட்டி வைத்து அடித்தார்

கழுதை, வராத கவிதையை 

அவர்தான் முதலில் வரவழைத்தார்!

 

காதல் பார்வை பார்த்தவள்

காலில் போட்டு மிதித்தாள்

தளர்ந்து போயிருந்த கவிதையை

அவள்தான் தூக்கிப் பிடித்தாள்!

 

காகிதத்தை எடுத்து முகத்தில்

கோபமாய் மேலதிகாரி அடித்தார்

தூக்கில் அன்றே தொங்கியிருப்பான்,

கவிதை மகள் அன்றோ தடுத்தாள் !

 

கவிதை செத்து விட்டதாய் – பலர்

கைகொட்டி ஒன்றாய் சிரித்தார்

செத்துபோன கவிதைக்கு

சிலர் இரங்கற்பாக்கள் வடித்தார்!

Advertisements

Comments are closed.