எந்த கந்தர்வனோ வந்து பிறந்தான்

Posted: July 14, 2015 in Tamil cinema, Tamil film music
Tags: , , ,

மெல்லிசை தனக்கவன் நாதன், இந்த 

மேதினி புகழ் விஸ்வநாதன் 

கல்லையும் கரைத்திடும் கீதன் – அவன் 

கலைமகள் அனுப்பிய தூதன் 

தமிழின் சுவை-அதனை, இந்த 

புவியின் திசை அனைத்தும் – ஏழு 

சுரங்களில் உரைத்தான் – தமிழ் 

இதயங்கள் அனைத்தையும் கரைத்தான் 

 

வெள்ளி நிலாவது போலே – அவன் 

வெற்றிகள் வளர்ந்ததனாலே 

துள்ளி குதித்தது இசைதான் – அமுத

தோரணம் காற்றின் மீசைதான் 

தமிழ் போகிற வழியில் அவன்

சுரம் போகிற கதியில்  

தேன் மலர் சோலைகள் மணக்கும் – அங்கு

தீங்கனிகள் மிகுந்தினிக்கும்

சொல்லுக்கு சுகம்தரும் சித்தன் – அவன் 

ஸ்ருதிலய ஞானத்தில் புத்தன் 

அள்ளும் நெஞ்சை அவன் மெட்டு – அதன் 

அடி ஒவ்வொன்றிலும் மின்னல் வெட்டு 

நிலையாம் அவன் பரிசே அவன் 

கலைஞானத்தின் வரிசை – பா

வரிசை படம்தந்தானே – அதன் 

பாடல் ஒவ்வொன்றும் செந்தேனே..

 

மலர்களைப் போல் சொற்கள் விளங்கும் – அதில் 

ஒளிய்மயமான் மேட்டுத் துலங்கும் 

நவரச நாடகம் நடக்கும் – அதில் 

புது இசை அணைகளை கடக்கும் 

கடல் போல் தினம் விரியும் – அவன் 

இசையா கரை அறியும் – அது 

நாரத வீணையின் நயமோ – இந்த 

பூமியின் புது அதிசயமோ 

 

கவியரசன் வந்து அமர்வான் – இந்த 

இசையரசன் அதை உணர்வான் 

ஓடிவரும் பெரும் பாட்டு – அதில் 

கூடிவரும் புது மீட்டு 

எது வந்தது முன்னே என 

எவர் சொல்லிட முடியும் 

நாள் ஒவ்வொன்றும் இப்படி விடியும், அதில் 

நல்லிசை நாடெங்கும் படியும் 

 

கட்டைகள் கருப்பு வெள்ளை, இவன் 

மெட்டுக்கள் ஒக்கும் வானவில்லை 

கற்பனையின் ஊற்று இவன்தான், எந்த 

கந்தர்வனோ வந்து பிறந்தான் 

விளையாடிடும் விரல்கள் தமிழ் 

ஒளிவீசிடும் சுரங்கள் – இவன்

அகல விரிந்திடும் வானோ – இசை 

அமுதம் தரும் காமதேனு ..

Advertisements

Comments are closed.